குடியரசு தினத்தன்று காஷ்மீரில் தேசிய கொடியை யேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காஷ்மீர் சென்ற பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்த்குமார் போன்றோர் ஜம்மு விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை . இதனை தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களை அனுமதிக்குமாறு

விமானநிலையம் முன்பு பாரதிய ஜனதா தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பாரதிய ஜனதா யுவமோர்ச்சா-இளைஞர் பிரிவினர் யாத்திரையாகப் புறப்பட்டு காஷ்மீர் நோக்கி செல்கின்றனர். லால்சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றும் வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய கொடியை யேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்த்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்கள் நகருக்குள்-செல்ல மாநில போலீசார் மறுத்துவிட்டனர். ஒத்தன் காரணமாக அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து விமான நிலையத்தில் பா.ஜ., தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். இதனை தொடர்ந்து 3 பா.ஜ., தலைவர்களையும் விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

{qtube vid:=aJNh3scuNr0}

Tags:

Leave a Reply