அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் மத்திய-அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் முரளீதர் ராவ் தெரிவித்தார் .

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , தொலைத்தொடர்பு ஊழலில் தயாநிதி மாறனின் பெயர் அடிபடுகிறது.

அவருக்கு எதிரான பல ஆதாரங்களை சிவசங்கரன் சிபிஐயிடம் வழங்கியுள்ளார் . ஊழல் புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்து வருவது ஏற்கத்தக்கது அல்ல . அதை பொறுத்துக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக பதவியிலிருந்து-விலகவேண்டும். அல்லது பிரதமர் அவரை நீக்க வேண்டும் என தெரிவித்தார் .

Tags; ஊழல் புகார்கள் , மத்திய அமைச்சர் பதவி,தயாநிதி மாறன், முரளீதர் ராவ்,  தயாநிதி மாறனின் பெயர்

Leave a Reply