தமிழக சட்டசபை தேர்தலில்,கூட்டணியா , தனித்து போட்டியா என்பது தொடர்பாக வரும் 29ம் தேதிக்கு பிறகு தெரிவிப்போம்,” என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

இந்துக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வரும் பா ஜ கவை மதவாத கட்சி என கூறிவருகின்றனர் . இந்து மதத்தில் இருக்கும் அனைத்து ஜாதியினரின் உரிமைக்காகவும் பாரதிய ஜனதா, போராடி வருகிறது.

பாரதிய ஜனதாவினர் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள்-அல்ல. அதே நேரத்தில் , சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.வரும் 29ம் தேதி, பாரதிய ஜனதா சார்பாக , சென்னையில் நடக்க இருக்கும் மாநிலம்-தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு சட்டசபை தேர்தலில் கூட்டணி-வைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது பற்றி முடிவு செய்யப்படும். என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply