போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே உள்ள நட்புரவு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விளக்கம் தர வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா சார்பில் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு (காஷ்மீர் தலைநகர்) இளைஞர் யாத்திரையை நேற்று தொடங்கிவைத்து பேசினார் , அப்போது அவர் பேசியதாவது .

  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய-முற்போக்கு கூட்டணி நாட்டை கொள்ளையடிக்கிறது . 2ஜி மற்றும் காமன் வெல்த் ஊழல்களில் ரூ. 2.5 லட்சம் கோடி வரை கொள்ளையடிக்க பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 56 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது . ஆனால் ஏழைகள்-ஏழைகளாகவே இருக்கின்றனர்.

இத்தாலி வர்த்தகர் குவாத்ரோச்சி பீரங்கி பேரத்தில் முக்கிய குற்றவாளி. ஆனால் ராஜீவ் சோனியா காந்தி வீட்டுக்கு வந்து செல்பவராக இருந்துள்ளார். 27 முறை குவாத்ரோச்சி சோனியா வீட்டுக்கு வந்து-சென்றதாக அவரது டிரைவர் சிபிஐ-விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் ஒரு கிலோ வெங்காயத்தை 80 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட இளைஞர்-யாத்திரை வரும் 26ம் தேதி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சென்றடையும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக ஸ்ரீநகரில் தேசிய கொடி ஏற்றப்படும். இதற்கு காஷ்மீர் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சரியல்ல. இந்தியர் ஒருவர் நாட்டின் எந்த வொரு பகுதியிலும் தேசியகொடியை ஏற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற-தேவையில்லை என்றார் அவர்.

{qtube vid:=iiuWGNGwYRE}

Leave a Reply