கர்நாடகவில் மத்திய அரசினுடைய ஏஜன்டாக கவர்னர் பரத்வாஜ் செயல்படுவதாகவும், கவர்னரை மாநிலத்திலிருந்து திரும்ப பெறவேண்டும் என்றும் இல்லையெனில் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் என அத்வானி தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கோரியுள்ளனர்.

முதல்வரின் உறவினர்களுக்கு அரசு நிலம் வழங்கியது

தொடர்பான பிரச்சனையில் முதல்வர் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க கவர்னர்-பரத்வாஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பாரதிய ஜனதா . கடும் கண்டனம் தெரிவித்தது. கவர்னரின் போக்கை எதிர்த்து மாநிலம்-தழுவிய பந்த்க்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த பந்த் காரணமாக மாநிலம்முழுவதும் இயல்பு-வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னரை திரும்ப பெற கோரி ஜனாதிபதி பிரதீபாபாட்டீலை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர்கள் மகஜர் ஒன்றை கொடுத்தனர் . பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தலைமையின் கீழ் எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், வெங்கையாநாயுடு மற்றும் பா.ஜ. மூத்த நிர்வாகிகள் சென்றனர். கவர்னரினுடைய மாநிலவிரோத போக்கை எடுத்து கூறினர். சுமார் 15 நிமிடம இந்தசந்திப்பு நடைபெற்றது .

{qtube vid:=ypTQbiR4nuw}

Leave a Reply