தமிழகத்தில் மீனவர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் முரளிதர்ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சென்னையில் முரளிதர்ராவ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது : இந்தியாவில் ஜவுளி, விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாகும். இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டார் . நீளத்துக்கு கடற்கரையும், சுமார் 3,200 மீனவ கிராமங்களும் இருக்கின்றன . 2 கோடி மக்கலின் வாழ்க்கை மீன்பிடி தொழிலை நம்பியுள்ளது . இத் தொழில் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. வெளி-நாடுகளுக்கு 8 ஆயிரம்கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடித்தல் இப்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சுனாமிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பருவ-நிலை மாற்றதின் காரணமாக மீனவர்கள் அடிக்கடி கடலுக்கு செல்ல இயலவில்லை.

இது-போன்ற மீனவர் பிரச்னைகளை நேரில் அறிவதற்காக பாரதிய ஜனதா நிர்வாகிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம், ராமநாதபுரம், புதுச்சேரியில் இருக்கும் சில மீனவர் கிராமங்களுக்கு நேரில் சென்று நான் மீனவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தேன். தமிழகத்தில் மீனவர்கள் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர். மண்ணெண்ணெய், டீசல், படகு, வலை ஆகியவற்றின் விலை உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 2 நாள்களாக மீனவர்களுக்கு வருமானமே இல்லை. ஜல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

எனவே மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார் முரளிதர் ராவ். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Leave a Reply