”காதலில் போதை இல்லையோ

நெஞ்சில் கருணையில் போதை இல்லையோ!”

     இது கவிஞரின் சினிமா பாடல் வரிகள்!

போதை என்பது ஒருமயக்கம்தான்!

     மயங்கிய நிலையில் மனிதன் தடுமாறுகிறான்! தடுமாற்றத்தில் அவன், தான் ஒப்புக்கொள்ளாத செயலையும் செய்துவிடுவான்!

     காதலில் போதை இருப்பதால்தான் ஓடிப்போவது, திருட்டு திருமணம் செய்வது, வன்முறையில் ஈடுபதுவது, கொலை செய்வது முதலியன நடக்கிறது!

     நெஞ்சில் கருனையில் போதை இருப்பதால்தான் துறவியாவது, குடும்பத்தை துறந்து பொதுசேவைக்கு வருவது முதலியன சாத்தியமாகிறது!

     பதவி சுகத்தில் போதை இருக்கிறது, அடிமைத்தனத்தில் போதை இருக்கிறது,தேச பக்தியில் போதை இருக்கிறது, உபசரிப்பதில், அன்புகாட்டுவதில், சேவை செய்வதில் . . . இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்!

     இதைத்தவிற குறுக்குவளியில் போதைக்கான பொருட்கள் பல உள்ளன! அவைதான் புகையிலை, கள், கஞ்சா, ஒயின், பிராந்தி, சாராயம், ப்ரவுன்சுகர்,பெத்தடின் போன்றவை!

    இந்த குறுக்குவழி போதைப்பொருட்கள், அதை உட்கொள்ளும் மனிதனின் மூளையை வேகமாக பாதிக்கிறது! அதனால் புத்தி தடுமாற்றம் ஏற்படுகிறது! இந்த புத்தி தடுமாற்றத்தைத்தான் நாம் போதை என்கிறோம்!

      உண்மையில் இது போதையல்ல இது மூளைச் சிதைவு! மூளைமீது ஒரு தாக்குதலை செய்வதுதான் இந்த போதைப்பொருட்களின் வேலை! இவற்றில் திரவக நிலையில் இருக்கக்கூடிய பீர், ஒயின், பிராந்தி, சாராயம் முதலியவற்றை மதுபானம் என்கிறோம்!

தமிழகத்தில் இந்த மதுபான வியாபாரத்தை அரசாங்கமே செய்வதுதான் வேலியே பயிரை மேயும் அதி பயங்கரமான குற்றச்செயல்!

     1972 க்கு முன்பெல்லாம், மது அருந்துவோரை காவல் துறையினர் விரட்டுப்பிடிப்பார்கள்! வழக்கு தொடுப்பார்கள்! சிறையில் அடைப்பார்கள்! மது அருந்துவோரை சமுதாயம் தரக்குறைவாக எடைப்போடும்! அது கேவலமான செயலாக சமுதாயத்தில் கருதப்பட்டது! எனினும் ”சிலர்” காவல் துறையின் கண்ணில் படாமல் மது அருந்தி வந்தனர்!

     அந்த சிலரில் ”பலர்” இன்னும் பல குற்றங்களை செய்யும் குற்றவாளிகளாக இருந்தார்கள்! அந்த சிலரையும் பலரையும் கொண்டுதான் 1940 களில் திராவிட கழகம் திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவை துவக்கப்பட்டது!  1967ல் அவர்களே தமிழகத்தில் ஆட்சிக்கும் வந்துவிட்டதால், 1972ல் மதுவுக்கு அரசின் அங்கீகாரத்தைக் கொடுத்தார்கள்! மதுக்கடைகள் அரசின் அனுமதியோடு நடத்தப்பட்டது! திமுக கட்சியை சார்ந்தவர்கள் மதுக்கடைகளை நடத்தி சம்பாதித்து குடும்பங்களை கெடுத்தனர்! மது அருந்தியவனை விரட்டிப்பிடித்த காவல்துறை குடித்திருப்பவனுக்கு மரியாதை கொடுத்தது! தமிழகத்தின் நிலை தலை கீழாக மாறியது!

     தொடர்ந்து பதவிக்கு வந்த அதிமுக வும் அதையே செய்தது! ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மதுக்கடைகளுக்கு அனுமதி கொடுப்பதை நிறுத்தி, அரசே நேரடியாக மது வியாபாரத்தை நடத்துவது என முடிவு செய்து இன்றுவரை ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் சேர்ந்து மது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வெற்றிகரமாக தமிழகத்தை அழித்தும் வருகின்றனர்!

     புதுப்புது மதுக்கடைகளை எங்கெங்கெல்லாம் துவங்கலாம்? மதுப்பழக்கம் இல்லாத இளைஞர்களை மது பழக்கத்தில் வீழ்த்துவது எப்படி? இன்னும் அதிகமானவர்களை குடிக்கவைப்பது எப்படி? என்றெல்லாம் திட்டமிடுவதற்கு அதிகாரிகளை அரசு நியமித்திருக்கிறது!

     சினிமாத்துறையினரும் இந்த சதிச்செயலில் இணைந்துள்ளனர்! மது அருந்துவது தமிழக குடும்ப கலாச்சாரமாகும், அதில் தவறு எதுவும் இல்லை! இன்னும் வகையில் சினிமாவில் காட்சிகள் அமைத்து, மது விற்பனையை அதிகரிக்க சினிமாக்காரர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்!  

     சுமார் இருபத்தோராயிரம் மதுக்கடைகளை தமிழக அரசாங்கம் நடத்திவருகிறது! பதினெட்டு மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை திமுக அதிமுக வினர் நடத்தி வருகின்றனர்! வருடத்திற்கு அரசுக்கு சுமார் ஏளாயிரம் கோடியும், மது ஆலைகளை நடத்தும் திமுக அதிமுகவினருக்கு பதினைந்தாயிரம் கோடியும் வருட வருமானம் இருக்கிறது!

     இந்த வருமானத்தில்தான் அரசாங்கம் நடக்கிறது என்று சொல்கிறார்கள்! திமுக அதிமுக வினர் மது ஆலைகளை நடத்துவதால், திமுக அதிமுக கட்சியினருக்கு கிடைக்கும் லாபத்தில் என்ன நடக்கிறது?- என்பது நமது கேள்வியாகும்!

     சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.

     மோகன் புருவரீஸ் – மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.

     எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.

     கல்ஸ்- தி.மு.க. தலைமையின்  வாரிசுகள்.

     அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.

     ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு  சொந்தமானது.

     யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.

     மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.

    சிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் உறவினர் குழுமத்துக்கு சொந்தமானது.

     எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன். 

     சபில் – பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு  சொந்தமானது.

     மிடாஸ்- அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.

     எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.

     எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.

     கல்ஸ் – திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.

     கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.

     இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
     இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் மது ஆலைகள் அனைத்தும், நேரடியாக அல்லது மறைமுகமாக திமுகவும் அதிமுகவினருக்கே சொந்தமானது!

     ரூபாய் 300 அரசுக்கு செலுத்திவிட்டு 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யும் மணல் கொள்ளை, கிரானைட் மலைக்கொள்ளை, லஞ்சம்வாங்கும் அரசு அதிகாரிகளிடம் வாங்கும் பங்குத்தொகை இப்படியாக கணக்கிட முடியாத வருமானத்திற்காகத்தான் திமுகவும் அதிமுகவும் போட்டிப்போடுகிறார்கள்! இந்த வருமானத்தை கைபற்றத்தான், பாஜக வை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டோம் என கொக்கரிக்கிறார்கள்!

     திமுக ஆட்சி நடக்கும்போது அதிமுக வினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்தும் திமுக அரசு மது வாங்கத்தான் செய்கிறது! அதேப்போல அதிமுக ஆட்சியின்போது திமுக வினர் நடத்தும் ஆலைகளில் இருந்து அதிமுக அரசு மதுவை வாங்கத்தான் செய்கிறது! இரண்டுமே ஒரே ஊழக் குட்டையில் ஊறிக்கிடக்கும் மட்டைகள்தான்!

    மதுவால் ஒவ்வொரு குடும்பமும் அழிந்துக்கொண்டிருக்கிறது! தமிழக தாய்மார்களை இது பெரிதும் பாதித்துள்ளது! எனவே அவர்கள் முறங்கொண்டு புலி ஓட்டிய பரம்பரையாக அரசின் மதுக்கடைகளை உடைக்கும் போராட்டத்தை நடத்துகிறார்கள்! இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்! நீதி மன்றங்களின் தீர்ப்புகளும் மதுக்கடைகளுக்கு எதிராகவே உள்ளன!

     பாஜக வும் மதுவுக்கு எதிராக உள்ளது! மதுவியாபாரம் பறிபோனாலும் மற்ற வருமானங்கள் இருக்கிறதே! எனவே எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும்! எனவே இப்போதைக்கு தாய்மார்களிடம் நாங்களும் மதுவை எதிர்க்கிறோம் என சொல்லிவைப்போம், என்னும் மனநிலையில் திமுக உள்ளது! அதிமுக வும் அந்த நிலைக்கு வரலாம்!

     பாமக தேமுதிக மதிமுக கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் ஆகிய அனைத்துகட்சிகளும் இந்த தந்திர நிலைக்கு வரலாம்! ஆனால், குடிகாரன் பேட்சு விடிந்தாலே போச்சு என்னும் பழமொழி இந்த கட்சிகள் அனைத்திற்கும் பொருந்தும்! இவர்கள் அனைவரும் மது பிரியர்களே! இவர்கள் அனைவரும், தமிழகம் அழிந்தாலும் பரவாயில்லை நாம் சம்பாதித்தால் போதும் என்னும் மனநிலையில் இருக்கும் ஊழல்வாதிகளே! எனவே மதுக்கடைக்கு எதிராக போராடுவோரும் மதுக்கடைக்கு எதிரான மனநிலையில் இருப்போரும் இவர்களை நம்பக்கூடாது என்பது எமது கருத்தாகும்!

மதுபழக்கத்திற்கு எதிரான அரசியல் கட்சி எதாவது உண்டு என்றால் அது, ராஸ்டிரிய ஸ்யம்சேவக் வழிவந்த பாரதிய ஜனதா கட்சி மட்டுமே! பாஜக வால் மட்டுமே மது இல்லாத தமிழகத்தை காணமுடியும்! எனவே மதுவுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் ஆதரிக்கவேண்டிய கட்சி பாஜக மட்டுமே!

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply