கறுப்பு பணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க-மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“கறுப்புப்பணம்” குறித்து சிறப்பு விசாரணை-குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு-பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்த உத்தரவை மறு-பரிசீலனை செய்து, திரும்பப்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வெள்ளிகிழமை மனுதாக்கல் செய்யபட்டுள்ளது.

சிந்திக்க ; யார் விசாரிச்சா இவங்களுக்கு என்ன கருப்புப்பணம் வெளிவந்தால் போதும் என மதிய அரசு நினைத்தால் உச்ச நீதிமன்ற செய்கையை வரவேற்றிருக்கும் . அதை விட்டு விட்டு நீதிமன்ற நடவடிக்கையை எதிர்த்து மனுதாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் தான் என்ன. நீதிமன்றம் குழு அமைத்தால் 2G வழக்கு போல் இவர்கள் குறுக்கீட முடியாமல் போகும். பல பேர் உள்ளே போக வேண்டி வரும் எனவேதான் எதிர்க்கிறார்கள்.. சுப்ரீம்கோர்ட் தனது பிடியை விடகூடாது. அப்போதுதான் இந்திய மக்களுக்கு நியாயம்கிடைக்கும். சுப்ரீம் கோர்ட் ஒன்று தான்-இப்போதைக்கு நம்பிக்கை நட்சத்திரம்

Leave a Reply