பஞ்சாப் மாநிலத்தில் மர்தான் நகரப்பகுதியில் பாக்.,ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது . இங்கு ராணுவ வீரர்கள் அதிகாலையில் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 11 ராணுவ வீரர்கள் பலியாயினர். 25 க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பக்கத்தில்

உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போதைய நிலையில் 20 பேர் வரை இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்த குண்டு வெடிப்பிற்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இது தலிபான் இயக்கத்தினர் நடத்திய மனித வெடிகுண்டுதாக்குதலாக இருக்கலாம் என கருதபடுகிறது

{qtube vid:=

Leave a Reply