உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., புருஷாத்தம் நரேஷ் துவிவேதி நேற்று போலீசாரால் கைது செய்ய பட்டார்.

நராயினி சட்டசபை தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரு ஷாத்தம் நரேஷ் துவிவேதி . தலித் வகுப்பை சேர்ந்த 17வயது பெண் ஷீலுவை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்

. அதே நேரத்தில், எம்.எல்.ஏ.வின் புகாரின்பேரில் கடந்த மாதம் அந்த பெண் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரிய பிரச்னையாக ஆனதை அடுத்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குபதிவு செய்யவும், கைது-செய்யவும் முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். இதை அறிந்து புருஷாத்தம் நரேஷ் தலைமறைவானார்.

இருப்பினும் பாண்டா மாவட்டத்தில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் . வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டார், அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

{qtube vid:=j3npSqrbL30}

Leave a Reply