வெப்ப பிரதேசத்தில் இருக்கும் நாம் எப்படி குளிர்சாதனங்களின் உதவியை  நாடுகிறோமோ, அதே போன்று குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள்  வெப்பம் உண்டாக்கும் கருவிகளை நாடுகிறார்கள். அங்கு வெப்பம் உண்டாக்கபடும் முறைகளை பார்க்கலாம்….

வெப்பக்கடத்தல் வெப்ப பொருளிலிருந்து உஷ்ணம் எரிபொருள்களுக்கு கடத்தப்படுகிறது. இது மூன்று முறைகளில் கடத்தபடுகிறது. மிகச்சூடாக இருக்கும் பொருளின் மீது மற்றொரு-பொருள் படும்போதோ அல்லது அந்தப்பொருளை ஒரு பழுக்கக்காய்ச்சிய கம்பி-மூலம் சுடவைக்கும் போதோ உஷ்ணம் ஒருபொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு கடத்தபடுகிறது. திரவம் அல்லது வாயு சுடவைக்கபடும்போது, அந்த திரவம் அல்லது வாயுவிலிருந்து வெப்பம் வெளியேற்றபடுகிறது. வீட்டில் இருக்கும் ஹீட்டடர்  தொட்டியில் பொருத்தப்படும்கம்பி, உஷ்ணபடுத்தப்பட்டு, அது மூழ்கியிருக்கும் நீரைச்சுட வைக்கிறது. இது 'கன்வெக்ஷன்' எனப்படும். அந்தவெப்பம், வேறொரு-பொருளை வெப்பப்படுத்தும். கதிர்வெப்பம் என்பது 'ரேடியேஷன்' மூலம் ஏற்படுவதாகும்.

மத்திய வெப்பப்பரவல் ஒரு குறிப்பிட்ட வெப்பமானியிலிருந்து வரும் வெப்பம், ஒரு கட்டிடம் அல்லது அறைமுழுவதையும் உஷ்ணபடுத்துவதற்கு மத்திய வெப்பப்பரவல் முறை என்று பெயர். குளிர் அதிகமுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் எல்லா வீடுகளிலும் 'சென்டர் ஹீட்டர்கள்' பொருத்தப்படுகின்றன.

Leave a Reply