ஆந்திரமாநிலத்தில் ராஜசேகரரெட்டியின் ஆட்சி காலத்தின் போது லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றபட்டன. இதில் பல கோடி மதிப்புள்ள ஊழல் நடந்துள்ளது. ராஜசேகர ரெட்டியின் குடும்பத்தினர் இணைந்து ஆந்திராவை கொள்ளை அடித்தனர். அந்த கொள்ளை இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி பள்ளகூடம் என்கிர கிராமத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழைகளிடம் இருந்து வாங்கி உள்ளார். இந்த பணம் எங்கிருந்து வந்தது. உரிய கணக்கு வைத்திருக்கின்றாரா? ஆந்திர மக்கள் ஒரே குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறினார்

Tags:

Leave a Reply