கோவில்களில் குழந்தைகளின் வழிபாடு? கோவில்களில் தான் வழிபட வேண்டுமா? மற்ற இடங்களில் வழிபட்டால் கடவுள் ஏற்க மாட்டாரா?  ! எங்கு வழிபட்டாலும் கடவுள் ஏற்பார். கோவில்கள் வழிபாட்டின் தரத்தினை அதிகமாக்க உதவும் கட்டமைப்புகள். அங்கு நடைபெறும் வேத மந்திர உச்சாடனங்களும், பூஜைகளும், சங்கல்பங்களும், பல ஞானிகள், தபஸ்விகளின்

வருகையினால் அங்கு நிலைபெற்றிருக்கும் தவ பலமும், வழிபாட்டில் மனதை லயிக்க வைக்க உதவுகின்றன. இந்த அத்துணை சௌகரியங்களும் வீட்டிலோ, அல்லது மற்ற இடங்களிலோ கிடைப்பது அறிது என்பதால் கோவில் முக்கியமாகப் பரிந்துரைக்கப் படுகிறது.

குறிப்பாக, 6 வயதுக்குள்ளே இருக்கும் குழந்தைகளை, தினசரியோ, வாரம் ஒரு, ஒருசில நாட்களோ, கோவில்களுக்கு அழைத்துச் சென்று வருவது, குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான நன்மைகளைக் கொடுக்கும்.

6 வயதுக்குள்ளே குழந்தைகளின் மனப்பான்மை பெரும்பாலும் கட்டமைப்பை ஏற்கிறது. இந்த காலகட்டங்களில், சிறந்த மற்றும் நல்ல மனிதர்களின் தொடர்பு, பக்தி, பஜனை, ஒழுக்கம்,…. போன்றவைகளைக் குழந்தைகள் பார்ப்பதும், கேட்பதும், தொடர்புக்கு வருவதும் அவசியம். அதற்கு மாறாக சச்சரவுகள்,… என்ற போன்ற டீ வீ காட்சிகள்,… போன்றவைகளைப் பார்காமலிருபதே நல்லது.

நன்றி ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more

Leave a Reply