பயங்கரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என பாகிஸ்தானிடம் சீனா வலியுறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி கேட்டு கொண்டுள்ளார்,
சீனாவில் சுற்று பயணம் மேற்-கொண்டுள்ள பாரதிய ஜனதா தலைவர் நிதின்-கட்காரி சீன அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது;
எல்லை கடந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவருகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் ஆதரவு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவே அமையும் .பாகிஸ்தானுக்கு சீனாவழங்கும் அணுஉலைகள் மற்றும் ராணுவ-உதவிகள் அனைத்தையும் இந்தியாவுக்கு எதிராக-பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு . அதனால் பாகிஸ்தான் உடனான தனது நட்ப்பை பயன்படுத்தி தீவிரவாதத்தை தூண்டும்செயல்களை நிறுத்தும்-படி சீனா வற்ப்புறுத்த வேண்டும்.
அருணாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர்-மக்களுக்கு சீனா அரசு தனிவிசா வழங்கி வருவது குறித்த பாரதிய ஜனதா,வின் எதிர்ப்பை சீன உயர் அதிகாரிகளிடம் சுட்டி காட்டியுள்ளேன். பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கிய இந்தியபகுதியான காஷ்மீரில் 5,000 சதுர கி.மீ., பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது பற்றியும் எடுத்துரைத்தேன்.இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.