ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சீனா கடந்த ஓராண்டு காலமாக தனி தாளில் தான் முத்திரையிட்டு விசா வழங்கி வந்தது. சீனாவின் இந்த செயல்பாடு காஷ்மீர்மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என வெளிப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது.

சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. ஆனால் சீனா தன்னை மாற்றி கொள்வதாக இல்லை . தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர் மக்களுக்கு முத்திரையிட்ட தனிதாளில் விசாவை வழங்கி வந்தது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகி தன்ய குப்தாவுக்கு பாஸ்போர்ட்டில்-முத்திரையிட்டு விசா வழங்கியுள்ளது. இந்த செயல், அந்நாடு தனது நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளதை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.சீனாவின் இந்த செயலை இந்தியா வரவேற்றுள்ளது.

Leave a Reply