சென்னை கிண்டி சிப்பெட் நிறுவனம் டெல்லிக்கு மாற்றப்பட இருக்கிறது என்று தெரிந்த உடனேயே அந்த நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது வளாகத்திற்குச் சென்று அவர்கள் அனைவரையும் 6.10.16 அன்றே சந்தித்து தெளிவாக அவர்களின் கோரிக்கையை பெற்று அடுத்த நாள் காவிரிப் பிரச்சினைக்காக எங்களது அகில பாரத தலைவரை சந்திக்க டெல்லி சென்றபோது அதை கைபட எடுத்துச் சென்று மத்திய தலைமையிடமும், அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.


அன்றையதினம் உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், அந்த கோரிக்கை அவர்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கபட்டது மட்டுமல்லாமல், உரத்துறை இணை அமைச்சரிடமும் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டது.


அதுமட்டுமல்ல, 27, 28 மத்திய உரத்துறை இணை அமைச்சர் திரு. மன்சுக்மாண்டவியா அவர்கள் சென்னைக்கு பல்வேறு துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு சென்னை வர இருந்தார்.  அப்போது சிப்பெட் வளாகம் செல்லும் திட்டம் இல்லை.  ஆனால் நான் வலியுறுத்தியதன் பேரில் நேற்றே என்னை தொடர்பு கொண்டு, 28-ம் தேதி 3 மணிக்கு சிப்பெட் வந்து நிர்வாகிகளை சந்திக்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.  


நேற்றைய தினம் சிப்பெட் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு சிப்பெட் மாற்றப்படாது என்று உறுதியளித்து, அதற்காக தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியை எனது சொற்பொழிவில் தெரிவித்தேன்.  அதே மேடையில் இருந்த பெரியவர் நல்லக்கண்ணு அவர்கள் இவ்வளவு முயற்சி எடுத்து வரும் பா.ஜ.கா வை நான் பாராட்டுகிறேன் என்றே சொன்னார்.  


அதுமட்டுமல்ல, நான் 7.10.16 அன்றே இதன் கோரிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டு, அதற்கான முயற்சிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமல்ல, நான் தனிப்பட்ட முறையில் இணை அமைச்சரிடம் சில நாட்கள் முன்பாக தொடர்பு கொண்ட போது சென்னை மாற்றப்படாது, விரிவுதான் படுத்தப்படும், அதே சமயம் டெல்லியிலும் மற்றும் 10 – 11 மாநிலங்களிலும் ; இதேபோல் ஒரு நிறுவனம் அமைக்கத்தான் வாய்ப்பு இருக்கிறது என்றார்.  அதையே இன்று வெளிநாட்டில் இருந்து திரும்பிய மாண்புமிகு அனந்தகுமார் அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்.  ஆக, தமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக் கொடுக்காது என்பது மட்டுமல்லாமல், நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு  மதிப்பு கொடுத்து தமிழகத்தின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
               இப்படிக்கு
                                     

   என்றும் மக்கள் பணியில்
                                            
                                     (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

மாநில தலைவர்

Leave a Reply