சிட்டி வங்கி குர்காவ்ன் கிளையில் ரூ. 400 கோடிக்கு மோசடி நடைப்பெட்றது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த மோசடி சம்பந்தமாக வங்கி ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி நிகழ்ந்ததே அதிர்ஷ்டவசமாக தெரியவந்துள்ளது. வங்கியின் ஆசியபசிபிக் பிராந்திய பேரிடர் நிர்வாக குழுவினர் குர்காவ்ன் வங்கி கிளையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி, இது சம்பந்தமாக ஆய்வு செய்து வருகின்றனர். பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் நபர்கள்-தான் இதை போன்ற மோசடியை செய்திருக்க வாய்ப்புள்ளது என வங்கி துறை குறித்து நன்கு பரிச்சயமுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பொதுவாக குறிப்பிட்ட வகை முதலீடுகளை வாங்க வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் வங்கி ஊழியர்கள், அத்தகைய முதலீடுகளை வாங்கிய பின் அதற்க்குரிய தொகையை வங்கி கணக்கில் சேர்க்காமல் அதை தங்களதுசொந்த கணக்கிற்கு மாற்றி கொண்டிருக்கலாம். இதன் மூலம் சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் தெரியவருகிறது

Leave a Reply