இந்த ஆட்சியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஊழல் குற்றச் சாட்டுகளை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதால், தங்கள் ஆட்சியில் செய்த ஊழல்களை கண்ணு, காது வைத்து அது இந்த ஆட்சியில் நடைபெற்றதாக உருவகப்படுத்தும் செயலில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.

அதன் வெளிப்பாடுதான் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜித்தின் மீதான ரூ.450 கோடி  ஊழல் குற்றச்சாட்டு. அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் பிச்சோம் மற்றும் டெங்கா ஆற்றின் நீரை மையமாக வைத்து கடந்த 2005ம் ஆண்டு காமெங் நீர்மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மாநில அரசின் உதவியுடன் மத்திய மின்துறை வசம் உள்ள நீப்கோ பொதுத் துறை நிறுவனம்  இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில்  பொதுத்துறை தலைமை ஊழல் கண்காணிப்பு  அதிகாரி சதீஷ் வர்மா ஐபிஎஸ் வெளியிட்ட  129 பக்க அறிக்கையில், ‘‘இரண்டு நீர்மின் திட்டங்கள் கட்டும்பணியில் ஊழல் நடந்துள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அவரது உறவினர் கோபோய் ரிஜிஜூக்கு இதில் தொடர்புள்ளது. என்று குற்றம் சாட்டியுள்ளார் ..

காங்கிரஸ் கட்சியோ தன்பங்குக்கு  மின்சார நிலையத்தை கட்டித்தந்த ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக பணத்தை விடுவிக்கும்படி கிரன் ரிஜிஜு மத்திய மின் துறை அமைச்சருக்கு எழுதியிருந்த ஒரு கடிதத்தை ஆதாரமாக வைத்து  பிரச்னையை கிழப்பியுள்ளது.

இதே சதீஷ் வர்மாதான் லஸ்கர்-இ-தொய்பா தற்கொலைப் படை தீவிரவாதி இஸ்ரத் ஜகானை ஆப்பாவி என்று கூறினார்  2011 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீதான பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலை திசைத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த தாக்குதலுக்கு பின்னால் மத்திய அரசே உள்ளது என்று பொய்யுரைத்து பாக் தீவிரவாதிகளை மகிழ்வித்தார்.

இப்போது யாரையோ மகிழ்விக்க யாருடனோ கூட்டு சேர்ந்து பாஜக அரசின் மீது ஊழல் கறையை ஏற்ற முயற்சித்துள்ளார். இத்தனைக்கும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது, ஒப்பந்தம் போடப்பட்டது 2004ம ஆண்டு. அன்று மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது காங்கிரஸ் அரசே.

 

மேலும் கிரண் ரிஜித் தொகுதியை சேர்ந்த துணை ஒப்பந்ததாரர்கள் (subcontractars) கற்பாறைகள், மணல்களை அனுப்பியதர்க்கான நிலுவைத் தொகை நீண்ட வருடமாக வரவில்லை பெற்றுத்தர வேண்டும் என்று கிரண் ரிஜித்திடம் நவம்பர்-09-2015 அன்று கோரிக்கை விடுத்ததால் நிலுவைத் தொகையை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்து மத்திய மின் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

அதுவும் 2012 ம ஆண்டுக்கு பிறகே தொகை வரவில்லை, அன்றும் பாஜக ஆட்சியில் இல்லை. நிலுவையில் உள்ள ஒப்பந்த தொகையை பெற்று தருவது எப்படி ஊழல் ஆகும்?.  ஒப்பந்தம் பாஜக ஆட்சியில் போடப்பட வில்லை, ஒப்பந்தததாரர்களை நியமித்தது காங்கிரஸ் அரசுதான். 2012ம ஆண்டு வரை ஒப்பந்த தொகையை தர பொதுத்துறை தலைமை ஊழல் கண்காணிப்பு  ஆணையம் எந்த ஆட்சியபனையும் தெரிவிக்க வில்லை.

நவம்பர்-04-2015 அன்று ஆதாவது கிரண் ரிஜித் கடிதம் எழுதுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே இதே சதீஷ் வர்மா ஐபிஎஸ் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று 60 சதவித நிதியை விடுவிக்க அனுமதி தந்தார். ஆக மொத்தத்தில் கிரண் ரிஜித்தின் பரிந்துரைக் கடிதத்துக்கு பின் அவசர கதியில் ஊழல் குற்றச்சாட்டுக்கான கதை வசனம் புனையப் பட்டுள்ளது.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஸ்

One response to “தாங்கள் செய்த ஊழல்களை திசைதிருப்பும் காங்கிரஸ்”

Leave a Reply