தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார் .

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது ;

”வாசனும், ப.சிதம்பரமும்தான் காங்கிரஸ் தோழர்களுக்கும், காங்கி்ரஸ் தொண்டர்கள்

வேண்டுகின்ற தொகுதிகளுக்கும் பாடுபடுகின்றார்களே தவிர, தலைவராக இருப்பவர் (தங்கபாலு) அவருக்கும், அவருக்கு வேண்டியவர்களுக்கும் வேண்டியதொகுதிகளை மட்டும் கேட்டு கொண்டு இருக்கிறார்.

இது நியாயம்தானா . இதைப்பற்றி நாங்கள் மேலிடத்தில் சொல்வோம். மேலிடத்தில்சொன்ன தொகுதிகளை கூட அவர் கேட்கமறுக்கின்றார்.

காங்கிரசுக்கு சாதகமான-தொகுதிகளை கேட்டு பெருவதற்க்கு அவர் மறுக்கிறார். ஆகவே இதேநிலை தொடர்ந்தால் தேர்தலின் முடிவுகள்…’என சொல்லிவிட்டு நிறுத்தியவர் பிறகு மீண்டும், ”அவ்வளவுதான் சொல்லமுடியும்” என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply