திமுக கூட்டணியில் மீண்டும் பா.ம.கவை சேர்ப்பதற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார் என்ற செய்தி தமிழக_அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது

வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற திமுக பொதுகுழு கூட்டத்தில் பா.ம.க.வுடனான கூட்டணி பற்றிய பேச்சு வந்தபோது, “”விரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோகிகளை மன்னிக்க

கூடாது. 2009 ஆண்டு வரை நம்முடன் ஆட்சியில் இருந்துவிட்டு திடீரென-கூட்டணியைவிட்டு விலகிய பா.ம.க.வை இப்போது மீண்டும் கூட்டணியில் சேர்க்க ஏன் விரும்புகிறீர்கள்? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டபோது எந்தப் பதிளையும் என்னால் கூற இயலவில்லை ‘ என்று கருணாநிதி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

thamarai talk
திரு. வாஜ்பாய் அமைச்சரவையில் கடைசிவரையில் ஒட்டிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு , முரசொலிமாறன் உடல்நிலை குன்றியபிறகும் மாதக்கணக்கில் ஆட்சியில் தொடர்ந்து, அவர் மறைந்த பிறகு இறுதிசடங்கில் பிரதமர் கலந்து கொண்டதையும் மறந்துவிட்டு ,பதவிக்காக கூட்டணி மாற்றியவர்கள் துரோகத்தைப் பற்றிப்பேச துளியும் அருகதை இல்லாதவர்கள்


Leave a Reply