இளைஞர் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியிலிருந்து சேலம் ஆத்தூர்வழியாக சென்னை வரை நடைபயணம் மேற்கெண்டுள்ளனர்.நடைபயணக்குழுவினர் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

நடை பயண குழுவினருக்கு ஆத்தூர் எம் எல் ஏ சுந்தரம் தரப்பில் வரவேற்பு தரபட்டது. நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர் சுசீந்திர குமாரும் கலந்து கொண்டார். இந்நிலையில் மாநில பொதுகுழு உறுப்பினர் ராஜ்கணேஷ் தலைமையில் வரவேற்பு தரப்படும் என சுசீந்திர குமார் தெரிவித்தார். இதை ஒப்புக்கொள்ள எம்,எல்,ஏ தரப்பில் மறுத்தனர். தொடர்ந்து இரு தரப்பிர்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:

Leave a Reply