ஆபாச நிகழ்ச்சியை டிவி யில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒளிபரப்பும்படி மத்தியதகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

பிக் பாஸ் மற்றும் ராக்கி காஇன்சாப் ஆகிய நிகழ்ச்சிகளில் ஆபாச விஷயங்கள் வெட்டவெளிச்சமாக காண்பிக்க படுகின்றன. சிறுவர்கள் பார்க்க தகாத இந்தநிகழ்ச்சிகளை முக்கிய நேரத்தில் ஒளிபரப்புவதால் சிறுவர்கள் பாதிக்க படும் அபாயம் இருப்பதாக பெற்றோர் மற்றும் பெண்கள் அமைப்பும் மத்திய தகவல்ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம் புகார்கூறின.

தங்களுக்கு வந்தபுகார்கள் உண்மை என்று உறுதி செய்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மேற்க்கண்ட நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 5 மணிக்குள், வயதுவந்தவர்கள் மட்டுமே பார்க்கும் விதத்தில் ஒளிபரப்பும்படி உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply