பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட்கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் வருவதன்மூலம் இருநாட்டு நல்லுறவு மேம்படும் இது வரை எங்கள் நாட்டின் சார்பில் துணை பிரதமர், வெளியுறவுத் துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். நான் பிரதமாராக பதவியேற்ற திலிருந்து 3 முறை இந்தியா வந்துள்ளேன். நரேந்திர மோதியின் பிரிட்டன் வருகையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply