ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து-வரும் சி.பி.ஐ யின் முன்பு, ஏர்செல் நிறுவன முன்னாள்-அதிபர் சிவசங்கரன் வாக்குமூலம் தந்தார் . அதில் கடந்த 2006ம்-ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்துக்கு அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன், லைசென்சு தராமல் இழுத்தடித்ததாகவும்,

மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்க்கு ஏர்செல்லை விற்கும்-நிலைக்கு நெருக்கடி தந்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்தார் .

மேலும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு 14லைசென்சுகள் தரப்பட்டதாகவும் , அதற்கு பிரதிபலனாக, சன்-டைரக்ட் நிறுவனத்துக்கு மேக்சிஸ் நிறுவனம் சுமார் 500 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ததாகவும் சிவசங்கரன் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய பாராளுமன்ற கூட்டு குழு தலைவர் பி.சி.சாக்கோ,

பாராளுமன்ற கூட்டுக்குழு 85சாட்சிகள் உள்ள பட்டியலை இறுதி-செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பபடும். அவர்களில், கடந்த 1998ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரைக்கும் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர்களாக இருந்த அருண்-ஷோரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோரும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்

ஏர்செல், நிறுவன ,சிவசங்கரன், தயாநிதி மாறன், தயாநிதி மாறனின், தயாநிதி மாறனை, தயாநிதி மாறனுக்கு,
தயாநிதி மாறனும், தயாநிதி அழகிரி, தயாநிதி மாறன்

Leave a Reply