சென்னையை சுற்றி பல மகான்கள் சமாதி அடைந்த இடங்கள் உள்ளன. இப்படியாக சுமார் 50 அல்லது அறுபது சமாதிகள் சென்னையில் இருக்கலாம். அவை ஒவ்ஒன்றும் ஒவ்ஒரு விதத்தில் பிரசித்தி பெற்றவை. சமாதிகள் உள்ள இடங்களில் செல்லும்போது அங்கு அந்த மகான்களின் சக்தியினால் எழுப்பும் அதிர்வு அலைகள் உண்மையான பக்தி கொண்டு அங்கு
சென்று துதிக்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் செய்யும் என்பதே நமது புராதான நம்பிக்கை. அப்படிப்பட்ட ஜீவ சமாதிகளில் ஒன்றான சென்னை காரணீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் நுர்று மீட்டர் தொலைவில் உள்ள "குருலிங்க ஸ்வாமிகள் சமாதி" புகழ் பெற்றது.
ஸ்வாமிகளைப் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை என்றாலும் அவர் விருத்தாசலத்தில் பிறந்தவர் எனவும் அவருடைய இடது கையில் சிவலிங்கம் தோன்றியது என்ற செய்திகளும் உள்ளன. அவர் பெரும் சிவபக்தர். ஆகவே பல இடங்களிலும் உள்ள சிவாலயங்களுக்கும் சென்று சுற்றித் திரிந்தவர் இறுதியாக காரணீஸ்வரர் ஆலயத்தில் வந்து அவரை பூஜித்தபடி இருந்தார்.
அவர் எங்கிருந்து வந்தார் என்ற முழு விவரமும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் காரணீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து ஆலயத்துக்கு உள்ளேயே சமாதி அடைய விரும்பினார். ஆனால் அதை ஆலயப் பண்டிதார் அனுமதிக்கவில்லை. ஆகவே ஸ்வாமிகள் அருகில் இருந்த தெப்பக் குளத்தருகே சென்று அமர்ந்து கொண்டாராம்.
அன்று இரவு அவரை ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுத்தப் பண்டிதருக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டார். அவருக்கு அந்த ஸ்வாமிகளை தான் அனுமதிக்க மறுத்த சம்பவம் நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம் சென்று அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஸ்வாமிகள் வீபுதி தர அதை தண்ணீரில் கலந்து குடிக்க உபாதை நின்றது. அதன் பின் ஸ்வாமிகள் ஒரு இடத்தைக் காட்டி அங்கு தான் சமாதி அடைய விரும்புவதாகக் கூறினார். 13.12.1886 அன்று தான் சமாதி அடைய இருப்பதாக முன்கூட்டியே அறிவித்தப் பின் அதுபோலவே சமாதியும் அடைந்தார்.
அவர் மீது சமாதி எழுப்பி அதன் மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து உள்ளனர். அவருக்கு பிரதோஷ தினங்களில் பூஜைகள் செய்கின்றனர். வரடாந்திர விழாவும் நடைபெறுகிறது. அவர் பலருக்கும் தீராத நோய்களை குணப்படுத்தியும், பல விதங்களில் தமது சக்தியையும் காட்டி உள்ளார். அவர் சூட்ஷம ரூபத்தில் இருந்தவாறு தன் சமாதிக்கு வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
Tags; ஜீவ சமாதி , ஜீவ ஊற்று, சென்னை, மகான்களின், சக்தி, குருலிங்க ஸ்வாமிகள், சமாதி,
நன்றி சாந்திப்பிரியா
| < Prev | Next > |
|---|
தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord...
| ||
டீ யின் மருத்துவ குணம்
| ||
சின்னம்மை ( நீர்க்கோளவான் )
|
மத மாற்றத்தின் தடைக்கல்லாய் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் "சமயவகுப்பு " 20 May 2013
பாலி (இந்தோனேசியா) இந்துக்களின் சொர்க பூமி 18 May 2013
அர்த்தமுள்ள ஹிந்துமதம் சொல்லும் பாவமாம், புண்ணியமாம்! 15 May 2013
வில்வம் சிவமூலிகைகளின் சிகரம் 14 May 2013
அக்ஷய திருதி தினத்தை நல்லுதவி தினமாக கொண்டாடலாம் 11 May 2013
வேதம் சரித்திரப் புத்தகம் அல்ல 05 May 2013
ஹிந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? 05 May 2013
வேதம் என்றால் அறிவு 03 May 2013
இனி ஒரு விதி செய்வோம் இங்கே !! 02 May 2013
திருவுருவங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை ; உணர்வில் தான் உள்ளது 27 April 2013
தனக்குமேல் தலைவனில்லாதவர் விநாயகர் 25 April 2013
கங்கை விஞ்ஞானம் 20 April 2013
தர்மம்காக்க அவதரித்த ராமன் 18 April 2013
அறத்தின் திருவுருவாய் அவதரித்த ஸ்ரீ ராமன் 16 April 2013
இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை 16 April 2013
48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை, அணையாத விழக்கு 15 April 2013
இறைவனால்தான் முக்தி தர முடியும் 15 April 2013
இந்தியாவில் எந்தக்காலத்திலாவது சீர்திருத்த காரர்கள் இல்லாமல் இருந்ததுண்டா? 13 April 2013
நான்கு யோகங்கள் 11 April 2013
நாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும் அல்ல 11 April 2013
மூட நம்பிக்கைகள் தோன்றுவதை நிறுத்த வழி இல்லையா? 11 April 2013
சித்தர்களும் மழையும் 11 April 2013
அருள் எனும் போதே இருள் என்பதும் உடன் தொக்கி நிற்கிறது 11 April 2013
மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளே உயிரோட்டம் உள்ள ஆன்மிக கருத்துகளை தந்தன 10 April 2013
ஒரு சில இடங்களில் மட்டுமே அருளூற்று சுலபமாகக் கிடைக்கும் 09 April 2013