ஒளிபடைத்த கண்ணினாய் வா வா என்றார் பாரதி, அனைவர் கண்களும் ஒளி கொண்ட கண்களோடு பிரகாசமான முகத்தோடு ஆரோகியமான உடலோடு வீரநடை போட வேண்டும் என்றால் இந்த பாரத தேசம் பொருளாதாரத்தில் பிரகாசமாக மிளிர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தான், அந்த வளர்ச்சியின் பிரகாசமும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மலர நம் பாரத பிரதமர் பல நல்ல திட்டங்களை தீட்டி வருகிறார் ஆக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்குவது வாழ்த்துக்களில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் இடம் பெற வேண்டும், அது இந்த கால கட்டத்தில் சாத்தியமாக வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
 
 தமிழகமும் மாநில உயிரோட்டத்துடன் தேசிய நீரோட்டமும் கலந்து ஒவ்வொருவர்  வாழ்விலும் மகிழ்ச்சி ஒளிர இந்த தீபா திருநாள் வழிவகை செய்யட்டும் என இறைவனை வழி படுகின்றோம்.
 
உடல் நலமற்ற தலைவர்கள் உடல் நலம் பெறவும், சுயநலமற்றவர்கள் பொது நலம் உடையவர்களாக மாறவும் தமிழர்கள் அனைவரும் பல பல நன்மைகள் பெற்று  நலமாக வாழவும் இறைவனை பிராத்திக்கிறேன்.
 
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் 
தமிழக பா.ஜ.க தலைவர். 

Leave a Reply