தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப்பங்கீடில் இழுபறி நிலை நீடித்து வந்ததால் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட திமுக முடிவு செய்துள்ளது.

இன்று-மாலை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .மேலும்,

அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும், பிரச்னையின் அடிப்படையில் மட்டும் காங்கிரஸ்க்கு ஆதரவு வழங்கபடும் என்று திமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

thamarai talk;
காங்கிரசை கழட்டிவிட்டது நல்லது. 67க்கு பிறகு திராவிட கட்சிகளின் துணையோடுதான் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று இன்னமும் தமிழகத்தில் உயிருடன் இருக்கிறது . காங்கிரஸ் திமுக,அதிமுக கூட்டு இல்லாமல் தேர்தலில் தனித்து நின்று தமிழகத்தில் தனது வாக்குவங்கியை காட்டட்டும், காங்கிரசுக்கு எந்த வோட்டுவங்கியும் கிடையாது , கோஷ்டி மட்டுமே இருக்குதுப்பா

Leave a Reply