தி.மு.க., ஆட்சியை அகற்றுவதர்க்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது வரும் தேர்தலில், “கை’ கோர்த்துள்ள தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியை அகற்ற இப்போது நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும்.

 

ஸ்பெக்ட்ரம் ஊழல்-பணம், கலைஞர், “தொலைக்காட்சிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது . ஆனால் இதற்கான பதில் திருப்தி அளிக்கவில்லை இதில், ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியான நடவடிக்கையால் தான் ராஜா கைது செய்யப்பட்டு இருக்கிறார் . இது திருப்தி தர கூடியதாக இல்லை.

வரும் சட்டசபை தேர்தலில் சொந்த பலத்தில் நிற்கும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply