கிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ஓடியுள்ளனர்.

திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறார்,

இந்நிலையில் உச்சபட்டியில் வீடு வீடாக சென்று தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர் , அங்கு கூடியிருந்த பெண்களிடம் திமுக. வெற்றிபெற்றால் இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவோம் என்று தெரிவித்தனர். உடனே அங்கு கூடியிருந்த கிராம பெண்கள்,சென்ற தேர்தலில் தாங்கள் அறிவித்த இலவச காஸ்-அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம் இன்னமும் எங்களுக்கு தரவில்லை . தாங்கள் தந்த இலவச கலர் டி.வி.யும் பழுதடைந்து மூலையில் முடங்கி கிடக்கிறது. மின்சாரமும் ஒழுங்காக எங்கள் பகுதிக்கு கிடைப்பது இல்லை . இந்நிலையில், கிரைண்டர், மிக்சி தருவதாக கூறுகிறீர்களே.. அதற்கு மின்சாரம் கிடைக்குமா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Leave a Reply