காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…
தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை

 

“ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,

வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது_நம்பிக்கை. வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டு மாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட_ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ என்வும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை  மேற்கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம்செய்தார் கிருஷ்ண பரமாத்மா.எனவே இந்தநாளை, “கீதா ஜயந்தி’ என கொண்டாடுகின்றனர்.

ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்ககூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு_வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்

2 , ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.

3 , ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம் . ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)_உண்ணலாம்.

4.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .

5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .

துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். (அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.)

துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.

6.துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப் தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.

7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

குரங்குகள் விரதம் இருந்த கதையாகிவிட கூடாது

ஒரு சமயம் வானரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. மனிதர்கள் ஏகாதசி அன்று உணவு சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறார்கள், ராம தூதர்கள் கோஷ்டியிலிருக்கும் நாம் மட்டும் ஏன் ஏகாதசி விரதம் இருக்க கூடாது என ஆலோசனி செய்தன .

எல்லா குரங்குகளும் ஒரேமனதாக ஏகாதசி விரதம் இருப்பதாக தீர்மானித்தன. எனவே முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு அருந்தின , மறுநாள் ஏகாதசி அன்று காலையில் சீக்கிரமாக கிளம்பி விரதத்தை தொடர்ந்தன காலை 10.00 மணி ஆனது எல்லாம் பசியால் வதைக்கபட்டன. ஏன் இதை ஏற்றுகொண்டோம் என நினைத்தன. அதில் ஒரு வானராம் நாளை துவாதசிக்காக உணவை தேடுவது கடினம் இன்றே அருகில் இருக்கும் மாந்தோப்புக்கு சென்று மரத்தில் உடகார்ந்துகொண்டு இருத்தல் நல்லது_என்றது. அதை அனைத்து வானரங்களும் ஆமோதித்தன. அப்படியேசெய்தன.

மணி பகல் 1.00 பசி தாங்க முடியவில்லை. அதில் ஒரு குரங்கு கையில் பழத்தைபறித்து வைத்து கொள்ளலாம். காலையில் சாப்பிட்டு விடலாம் என்றது. அப்படியே அனைத்து குரங்குகளும் செய்தன. மணி 2.00 ஆயிற்று. மற்றொரு குரங்கு நமக்குதான் கடவுள் தாடையில் பையை கொடுத்துள்ளான். எனவே பழங்களை_வாயிலேயே வைத்து கொண்டிருந்தால் காலை 6.00 மணிக்கு கடித்து தின்றுவிடலாம் என்றது. எல்லாம் உடன் பட்டன.

பழத்தை வாயில் அடக்கிகொண்டிருந்தன. எத்தனை நாழிதான் அப்படி இருக்கமுடியும். அடுத்த ஏகாதசி எப்படியும்_வைகுண்ட ஏகாதசி அன்று நாம் விரதம் இருக்கலாம் என்று சொல்லி கொண்டே பழங்களை சாப்பிட்டுவிட்டன. இது வானரங்களின் தன்மை. அதை போன்று நாம் ஏகாதசி விரதத்தை சொதப்பிவிடக்கூடாது

ஏகாதசி அன்று செய்யக்கூடாதது

ஏகாதசி திதி (குறிப்பாக வைகுண்ட_ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு நினைவுநாள்( சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்தவேண்டும்.

ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்ப வர்களை கேலிசெய்து அவர்களை உண்ண_வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்குசெல்வான்.

ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

ஏகாதசி விரத மகிமை

இப்போது ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி காண்போம்?

இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை_கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி_தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது .

திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை_அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது. இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை_முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில்_சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

திருக்குறுங் குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வுபெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப_விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு_செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை_மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

பாற்கடலில் மந்தார_மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற_நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை_உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏகாதசி விரதம் பற்றி எனக்கு தெரிந்தவரை எழுதி உள்ளேன் இருப்பினும் இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் உடனே தெரிவிக்கவும் VMVENK@GMAIL.COM

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

ஏகாதசி விரதம், ஏகாதசி, விரதம், இருக்கும், முறை ,  செய்யக்கூடாதது, ஏகாதசி விரத, மகிமை

Leave a Reply