மத்திய பெட்ரோலிய துறையால் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் எடுக்கும் விஷயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணைஅமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களை, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் சந்தித்து விவரங்களை கூறி விளக்கம் கேட்டார்.

இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் மிகத்தெளிவாக விளக்கங்களை எடுத்துக்கூறினார்.

 

 1. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் உள்ளது என்பதை கண்டுபிடித்தது கடந்த 2008ஆம் ஆண்டு. (அப்போது மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு இருந்தது)
 1. இதே போன்று, புதுச்சேரி, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதை வெளியே எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
 1. இத்திட்டத்திற்கு, தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இல்லை.
 1. ஹைட்ரோகார்பன் எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை.
 1. விவசாயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
 1. அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
 1. அப்பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படுவதோடு, தமிழ் நாடு அரசுக்கும் லாபம் கிடைக்கும்.
 1. இதே போன்று திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஏற்கனவே நடைபெற்று இருக்கின்றன.
 1. எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீரின் தன்மை பாதிக்கும் என்ற சந்தேகத்திற்கே இடமில்லை
 1. அயல்நாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவை குறைக்கும்.

 

என்பனபோன்று  மேலும் பல விஷயங்களை மத்திய இணை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் எடுத்துக்கூறினார்கள். திரு. தர்மேந்திரா பிரதான் அவர்களிடம் பேசும் போது,குறிப்பிட்டுச்சொன்னமிக முக்கியமான சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.மேலும், 

 

 1. இத்திட்டம் வருவதால் ஏதேனும் பாதிப்பு யாருக்காவது வர வாய்ப்பு உள்ளதா என்று மேலும் கவனம் கொடுத்து ஆய்வு செய்யப்படும்.
 1. இத்திட்டம் குறித்து அப்பகுதி மக்களின் கருத்தும் கேட்டறியப்படும்.
 1. இது போன்றவற்றிற்குப் பிறகும், இத்திட்டம் தேவை இல்லை என்று மக்கள் கருதுவார்கள் என்றால், அதை மீறி இத்திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்பதையும் தெளிவுபட கூறினார்.

தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அது அப்பகுதி மக்களுக்கு நல்லதா கேட்டதை என்று கூறும் தகுதி எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்பின் தலைவர்களுக்கும் இல்லை. ஏனெனில், அத்திட்டம் வருவதால் உள்ள நன்மை மற்றும் தீமைகளை ஆராய்ந்து அறியும் விஞ்ஞான ரீதியான தெளிவை எந்த அரசியல் கட்சிமற்றும்  அமைப்பின் தலைவரும் பெறவில்லை.

 

எனவே, நெடுவாசல் பகுதியில் வரும் இத்திட்டம், அப்பகுதி மக்களுக்கு நலன் தருமா இல்லையா என்பதை நன்கு தெரிந்து கொண்டு முடிவெடுப்பதே சிறப்பாக இருக்கும் என்று தான் கருதுவதாக திரு. பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்..

Leave a Reply