குடும்ப ஆட்சியைப்பற்றி குறை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தவித அருகதையும் இல்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் அந்த பகுதி மக்களின் நலன்கருதி தயாரித்த தேர்தல்-அறிக்கையை

பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, குடும்ப ஆட்சியை பற்றி குறைசொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தஅருகதையும் இல்லை. ஆட்சிக்குவந்தால் மன்னார்குடி குடும்பத்தின் தலையீடு-இல்லாமல் ஆட்சிநடத்த இயலும் என ஜெயலலிதாவால் வாக்குறுதி தர முடியுமா?.

தமிழகத்தில் மணல்கொள்ளையை அறிமுகபடுத்தி வைத்ததே அதிமுக ஆட்சி காலத்தில் தான். கடந்த 2003ம் ஆண்டு மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார்-படுகொலை செய்யபட்டதை மக்கள் மறந்துவிடவில்லை என தெரிவித்தார்

Leave a Reply