ஃபாஸி முகமது சவூதி சிறையில் உள்ளார் ; மத்திய அரசு இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவராக கருதப்படும் பொறியாளர் ஃபாஸி முகமதுவை சவூதி அரேபிய காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. சதாசிவம், ரஞ்சன்கோகோய் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் இந்த தகவலை தெரிவித்தார். ஃபாஸி முகமதுவை கைது செய்திருப்பதாக சவூதி அரேபிய காவல்துறை அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக தீவிரவாத இயக்கத்துடன் தனது கணவருக்கு எந்த தொடர்பும் இல்லை என ஃபாஸி முகம்மதுவின் மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை _தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply