1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு  என்ன நடந்தது?""தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா – இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -எனும் பாரதியின் வரிகளிலே நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை நாம் அறிந்து கொள்ளலாம் . கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த, ஆங்கிலேயர்களின் சகாப்தம், 1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு முடிவுக்கு வந்தது. அன்று இரவு என்ன நடந்தது?

டில்லியில் பாராளுமன்றம் கூடியது. காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள்_கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை பாடினார்.கூட்டத்தின் தலைமை உரையை ராஜேந்திர பிரசாத் வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம்_கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றுக்கொண்டார் . கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன், ஆட்சி அதிகாரத்தினை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சிபொறுப்பை ஏற்றுக்கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்' எனும் தலைப்பில் ஒரு சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

அதில், "" இன்று நாம் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை முழுமையாக அடையமுடியாவிட்டாலும் கணிசமான அளவுக்கு அடைந்து விட்டோம். உலகமே உறங்கி கொண்டிருக்கும் இந்த_நேரத்தில் இந்தியா சுதந்திரத்தையும் புதுவாழ்வையும் பெறுகிறது. புதிய சகாப்தம் இன்றிலிருந்து தொடங்குகிறது . வரலாற்றில் மிகஅரிதானதருணம் இது. நீண்டகாலம் அடைபட்டு கிடந்த ஒரு நாட்டின் மறு மலர்ச்சி இன்று புத்துயிர்பெறுகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்றசுதந்திரத்தை பேணிக்காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்லவும், மக்களின் சேவைக்காவும், மனித நேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம் என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *