சீனாவிற்கான கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. மேற்கு வங்காளம் மற்றும் குஜராத்திலிருந்து சீனாவிற்கு அதிக அளவில் “கடல் உணவுப் பொருள்கள் ” ஏற்றுமதியாகி வருகின்றன. குறிப்பாக இந்த மாநிலங்களில் கடல் பகுதிகளில் கிடைக்கும் விலை குறைந்த கணவாய் மீன் மற்றும் வாளை மீனுக்கு சீனாவில் தேவைப்பாடு நன்றாக உள்ளதாக தெரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்கு வங்களாத்திலிருந்து சீனாவிற்கு மிகக் குறைந்த அளவே கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியாயின. ஆனால் சமீப காலத்தில் ஏற்றுமதி ஆண்டுக்கு 7,000 டன் என்ற அளவிற்கு அமோக வளர்ச்சி கண்டுள்ளது.

சீனாவின் கடல் உணவுப் பொருள்கள் இறக்குமதியில் குஜராத் மாநிலத்தின் பங்களிப்பும் கணிசமாக உயர்ந்த வருகிறது. குறிப்பாக இங்கிருந்து வாளை மீன், ஊசி கணவாய், சூரை மீன் வகைகள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. சீனாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் உணவுப் பொருள்கள் குஜராத்திலிருந்து செல்கின்றன.

சென்ற நிதி ஆண்டில், டாலர் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி இந்தியாவின் மொத்த கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. ‘பிளாக் டைகர்’ இறால்கள், நன்னீர் இறால்கள், ஊசி கணவாய், சூரை மீன்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன

Tags:

Leave a Reply