வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்க்கு ஒதுக்க வேண்டிய 63 தொகுதிகள் குறித்து திமுகவுடன் இன்று ஐவர் குழு ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது .

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது . தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துவதற்க்கு

அமைக்கப்பட்ட ஐவர் குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை தொடங்கியது.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் கோஷ்டியும் தங்களுக்கு தேவையான தொகுதி பற்றிய விபரங்களை இந்த குழுவிடம் கொடுத்து வருகின்றன. முதலில் இந்த பட்டியளை வைத்து ஆலோசனை நடத்திவிட்டு, பிறகு எந்தெந்த தொகுதிகளை திமுகவிடம் கேட்பது என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் .

Tags:

Leave a Reply