ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதிகளை தலைமைதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் ஜனவரி மாதத்துடன் சட்டப் பேரவைக்கான காலம் நிறைவுபெறுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது, " ஜம்முகாஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி.வரை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

காஷ்மீரில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் இழப்பு, சட்ட ஒழுங்கு நிலை, பண்டிகைகள் ஆகியனவை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனையில் இந்த முடுவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து கட்டங்களாக நடக்க இருக்கும் தேர்தலின் வாக்குஎண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும்.

அதேபோல், டெல்லியில் காலியாகவுள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வரும் நவம்பர் 25 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்" என்றார் அவர்.

Tags:

Leave a Reply