டுவிட்டரில் உலகில் அதிக பாலோவர் (Follower)களை கொண்ட உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திரமோடி 3-வது இடத்தில் உள்ளார். மேலும் அதிக பாலோவர்களை கொண்டுள்ள வெளி விவகார மந்திரிகளில் சுஷ்மாசுவராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின் தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் 'டுவிட்டர் டிப்ளோமசி- 2015' ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன் படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒரு கோடியே 9 லட்சத்து 2 ஆயிரத்து 510 பாலோவர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். மே 2014 தேர்தலுக்கு பிறகு மோடி டுவிட்டர் பாலோவர்கள் எண்ணிக்கை உலகதலைவர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 5 கோடியே 69 லட்சத்து 33 ஆயிரத்து 515 பாலோவர்கள் கொண்டுள்ளார். போப்பிரான்சிஸ் 1 கோடியே 95 லட்சத்து 80 ஆயிரத்து 910 பாலோவர்கள் கொண்டுள்ளார். இவருக்கு 9 பல்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்கு உள்ளது.

வெளி விவகாரத் துறை மந்திரிகளில் அதிக பாலோவர்களுடன் சுஷ்மா சுவராஜ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 2 கோடியே 4 லட்சத்து 38 ஆயிரத்து 228 பாலோவர்கள் உள்ளனர். இவரைதொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லாபின் சயித் 1 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 831 பாலோவர்களையும், துருக்கியை சேர்ந்த மேவ்லட் கவுசோகுலு 3,76,429 பாலோவர்களையும் கொண்டு உள்ளனர்.

Tags:

Leave a Reply