பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி நல்லெண்ண பயணமாக சீனா சென்றுள்ளார் . விமான நிலையத்தில் நிதின்கட்கரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது . நிதின் கட்கரி சீன தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை சந்தித்து பேசவுள்ளார் . இந்தியா மற்றும் சீனா உறவுகள் மற்றும்

பல விஷயங்கள் குறித்து சீன-தலைவர்கள், அதிகாரிகளுடன் நிதின் கட்கரி தலைமையிலான உயர்நிலை பிரதிநிதிகள் குழு ஆலோசனை நடத்தியது .

சீன வந்த நிதின் கட்கரி நிருபர்களிடம் பேசியதாவது :

சீனா வந்து தலைவர்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி_ அடைகிறேன். சீனா இந்தியாவின் மிக பெரிய அண்டை நாடாகும் . 3,500- கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனா மற்றும் இந்தியா தங்களது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே கடந்த=1,600 ஆண்டுகளாக நாகரீகதொடர்பும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றார் .

Leave a Reply