அப்சல்குருவை தூக்கிலிட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நரேந்திர மோடி கும்பமேளா பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உ.பி., மாநிலம் அலகாபாத்தில் திரிவேணி சங்கத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வரும் 12-ந்தேதி அலகாபாத் கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராட திட்டமிட்டிருந்தார். அவரது சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் உபி. மாநில அரசுக்குதெரியப்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன .

இந்நிலையில் பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக நரேந்திரமோடி தனது கும்பமேளா பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply