சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பாக போட்டியிட்ட 100க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இந்த முறை சிறுபான்மையினரும் பெருமளவில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர்

இது குறித்து ஆமதாபாதில் சனிக்கிழமை நடந்த பேரணியில் மோடி பேசியது: “இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாரதிய ஜனதாவுக்கே வாக்களித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் இதை எடுத்துக் காட்டுகின்றன. பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட 100க்கும் அதிகமான சிறுபான்மையினர் (முஸ்லிம்) வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பழங்குடியினர் செல்வாக்கு நிறைந்த மத்திய மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் இதுவரை நடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றி எதும் பெற்றதில்லை. ஆனால் இந்த முறை அதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பாரதிய ஜனதா கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதை இது காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரா, சி.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குஜராத் அரசுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு. அதற்கு பதிலாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அமைப்புகளை பயன்படுத்தியிருந்தால் தீவிரவாத பிரச்னையில் பாதி குரய்ந்திருக்கும் . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்த நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார் நரேந்திர மோடி.

Tags:

Leave a Reply