ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ. தாக்கல் செய்ய இருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

சிபிஐ.யின் இரண்டாவது குற்றப்பத்திரிகை வரும் 25 ம் தேதி தாக்கல்செய்யப்பட இருக்கிறது. இதில் ஸ்பெக்ட்ரம் பணமானது

கைமாறியது தொடர்பாக டி.பி.ரியாலிட்டி கம்பெனியும், கலைஞர் டிவி,யும் குற்றபத்திரிகையில் இடம்பெற உள்ளது . டி.பி. ரியாலிட்டி திஹார்-சிறையில் உள்ள பல்வாவிற்கும், வினோத்கோயங்கா என்பவருக்கும் சொந்தமானது . கலைஞர் டிவி. கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமானது. மேலும் ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனியில் பல்வாவுக்கும்-கோயங்காவுக்கும் 46% பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply