ஜம்மு – காஷ்மீரில் யூரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஏவிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உறங்கி கொண்டிருந்த 18 இராணுவ சகோதரர்களை இழந்துள்ளோம். 18 குடும்பங்கள் தங்கள் மகனை, சகோதரனை இழந்துள்ளது. 18 குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் தங்கள் தந்தையை இழந்துள்ளனர். இது அந்த குடும்பத்துக்கு மட்டும் அல்ல தேசத்துக்கும் மாபெரும் இழப்பே.

ஒரு வீரனை மரணம் கன நேரத்திலும் எந்த வடிவிலும் தழுவலாம். தேசத்துக்காக தன் உயிரை துறப்பதும், எதிரியின் உயிரை பறிப்பதும் அதர்மம்மன்று. அவனுக்கு உயிரும் துச்சமன்று. இருப்பினும் உறங்கிக் கொண்டிருக்கும் போது கொத்து, கொத்தாக பாகிஸ்தானின் சதிக்கு தொடர்ந்து பலிகொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே.

எட்டு மாதத்துக்கு முன்புதான் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் 7 வீரர்களை இழந்தோம், 2008ம் ஆண்டு மும்பை தாஜ் விடுதி தாக்குதலில் பொதுமக்கள், காவல் துறையினர் உட்பட 164 பேர்களை இழந்தோம், 1999ம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள், இராணுவத்தினர் உட்பட 3000 பேரை கொன்று வீழ்த்திய போதிலும், நம் தரப்பிலும் 100 கணக்கான வீரர்களை நாம் இழந்தோம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சிறு சிறு தாக்குதல்களிலும் பலாயிரம் வீரர்களை நாம் இழந்துள்ளோம்.

கூலிக்கும், பொய்யான சொர்க்க சலுகைகளுக்கும் மூளை சலவை செய்யப்படும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அடிப்படைவாத இஸ்லாமிய இளைஞர்கள் தற்கொலைப் படை தீவிரவாதிகளாக பயிற்சி அளிக்கப்பட்டு பாகிஸ்தானால் ஏவப்படுகிறார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு பொருளாதார செலவும் குறைவு,  இராணுவ தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்ப்படுவதில்லை. இந்தியாவில் நிலையற்ற தன்மை ஏற்ப்படுவதால் சீனா போன்ற நாடுகளிடம் இருந்து ஆதாயத்தையும் பெறுகிறார்கள்.

கடந்த 35ந்து வருடமாக இதே அவல நிலைதான். ஆனால் இந்தியா அமைதி பேச்சு வார்தையை தவிர வேறு எந்த எதிர்வினையையும் ஆற்றுவது இல்லை. பலிக்கு பலி வாங்க வேண்டும் என்று முனைப்பும் காட்டுவதில்லை. இருந்தும் பாகிஸ்தான் தன்னை மாற்றிக்கொள்ளப் போவதும் இல்லை, எனவே இந்தியாதான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒன்று இந்திய எல்லைக்கு அருகில் இருக்கும் தீவிரவாத முகாம்களையும், அவர்களது சொத்துக்களையும் சேதப்படுத்த வேண்டும். எல்லைக்குள் புகுந்து சில நூறு தீவிரவாதிகளை அளிப்பதால் பாகிஸ்தான் கோபம் கொண்டு முழு அளவிலான போருக்கு வர வாய்ப்பு இல்லை. அந்த தேசத்துக்கு அப்படி ஒரு சுய கௌரவம் இருந்துருக்குமே என்றால் அது அமெரிக்காவுடன் பல நூறு போர்களை அல்லவா புரிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் இந்தியா பாகிஸ்தான் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும். வர்த்தகம், விஸா நடைமுறை அனைத்தையும் நிறுத்த வேண்டும். பொருளாதார தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தானை நாம் தனிமைப் படுத்த முடியும். ஏற்க்கனவே அழிந்து கொண்டு, வீழ்ந்து கொண்டு இருக்கும் தேசம், விரைவாக அழியும்! வீழும்!. அதை நோக்கித்தான் தற்போது மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply