இது சகிப்புத் தன்மையின்மை பற்றிய ஊடகங்கள் உண்டாக்கும் சர்ச்சைகள் குறித்த ஒரு இந்திய முஸ்லிம் பெண்மணியின் வெளிப்படையான கடிதம் !!

சகிப்புத்தன்மையின்மை என்ற போலியான நிலை இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக சொல்லப்படுகிறது. நான்இந்தியாவில் வசிக்கும், பணிபுரியும் ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் என் கருத்துக்களை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்! இந்த எண்ணம் எனக்கு கொஞ்சம் காலமாகவே இருந்து வந்தது என்றாலும் தலைக்கு மேலே வெள்ளம் போய்விட்டதாக நான் தற்போது உணர்ந்ததால் என் கருத்துக்களை இப்போது இங்கு சொல்ல விழைகிறேன்!!

குவைத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நான் 18 வயதில் மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவுக்கு வந்தேன்! நான் இப்போது பெங்களூருவில் ஒரு தோல்நோய் சிகிச்சை நிபுணராகப் பணி புரிகிறேன்! நான் இங்கு படிப்பை முடித்த போது பலரும் வேறு நாடுகளுக்கு சென்று செட்டிலாக நானோ இந்த நாட்டில் முஸ்லிம் பெண்ணாக எனக்கு எந்த விதமான சிக்கல்களும் வாழ்வில் வந்ததே இல்லை என்ற காரணத்தால் இங்கேயே 20 ஆண்டுகளாக வசிக்கிறேன்! இதன் காரணம் இங்கு மட்டுமே என்னுடைய வேர்கள் உள்ளன!!
நான் கர்நாடகாவில் உள்ள மணிப்பாலில் மருத்துவக் கல்வி பயின்றேன்! என்னுடன் படித்த பல மாணவிகள் போல நானும் அங்கு தனியாகத்தான் இருந்தேன்! என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் குடும்பம் குவைத்தில் இருந்தது! நான் அங்கு படித்த காலத்தில் எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் அனைவரும் ஹிந்துக்களே! இன்னும் என்னுடன் படித்த சக மாணவர்கள் பலரும் ஹிந்துக்கள்தான்! அவர்கள் என்னிடத்தில் இயல்பான நட்பைக் கொண்டிருந்தார்களே தவிர எப்போதும் பேதம் பார்த்ததில்லை!! இன்னும் சொல்லப்போனால் நான் கஷ்டமாக உணரக் கூடாது என்ற எண்ணத்துடன் என்னிடம் மிகச் சிறந்த பழக்கத்தை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல!!

மணிப்பாலில் கல்வியை முடித்த பின்னால் எனக்கு திருமணம் நடக்க நான் கணவருடன் பெங்களூருவில் செட்டில் ஆனேன்! இதற்கு முக்கியக் காரணம் என் கணவரே. அவரைப் பற்றி இங்கே கூறுகிறேன்! அவர் பெயர் இக்பால் ஆகும்! அவர் சென்னை ஐஐடி யில் விமானவியலில் எம்.டெக் படித்து அதன் பின்னால் ஜெர்மனியில் பி.எச்.டி படித்தவர். அவருடைய பனித் தொடர்புகள் எல்லாமே மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பான நிறுவனங்களான HAL, NAL, BHEL, DRDO, IISc, GTRE, ISRO போன்ற நிறுவனங்களில்தான் இருந்தது!! அந்த நிறுவனங்களில் அவர் ஒரு முறை கூட சிறப்பு பாஸ் பெறவோ அல்லது ஆடை அவிழ்த்து சொதனையிடப்படவோ இல்லை! அந்த நிறுவனங்களில் உள்ளவர்கள் தம்மிடம் எந்த பாரபட்சமும் காட்டாமல் பழகுவதாக என் கணவர் கூறுவார்! இன்னும் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த நிறுவனங்களின் செக்யூரிட்டி நடைமுறைகள் முறைப்படுத்தப்பட்டு செம்மையாக நடப்பதாக கூறுகிறார்! அவர் 9/11 சம்பவத்துக்குப் பின்னால் அமெரிக்காவுக்கு சென்ற போதெல்லாம் ஆடையை அவிழ்த்து சோதனை நடந்த பின்னரே அனுமதிக்கப் பட்டிருக்கிறார்! இன்னும் ஜெர்மனியில் பி.எச்.டி பயின்ற போது அவர் சிறப்புக் கண்காணிப்பு காமிராக்களின் பார்வையில் தான் படிக்கவே முடிந்தது. இன்னும் அதன் பின்தாண் ஜெர்மன் நாட்டிடமிருந்து அவர் குற்றப் பின்னணி இல்லாதவர், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற கடிதம் கிடைக்கப் பெற்றோம்!! இன்று உலகளவில் இஸ்லாமிய நடப்புக்கள் பற்றி சிந்தியுங்கள்!! ஆனால் இந்த சூழலிலும் என் கணவர் அவருடைய நிறுவன சகாக்களால் மிக மரியாதையுடனும், இயல்பான நட்புடனும் நடத்தப்படுவதாகவே சொல்கிறார்!! அப்படியிருக்க எங்களைப் பொறுத்தவரை இந்த சகிப்புத்தன்மையின்மை என்பது ஒரு வெறும் வார்த்தையாகவே தெரிகிறது!!


நான் சென்ற ஆண்டில் மோடி பதவியேற்ற காலகட்டத்தில்தான் பெங்களூருவில் லேசர் சிகிச்சை உள்ளிட்ட சிறந்த முறைகளைக் கொண்ட கிளினிக்கை திறந்தேன்! என் தொழில் சம்பந்தமான வரிகள் போன்றவற்றை சரியான வகையில் செலுத்துகிறேன்! அதே போல என்னுடையதொழில் அல்லாமல் எனக்கு சிக்கலை கொடுக்கக் கூடிய எந்த மறைமுகமான வேலைகளிலும் நான் ஈடுபடுவதில்லை!! என் கிளினிக்குக்கு வருகிற நோயாளிகள் பெருமளவில் ஹிந்துக்களே! ஒரு கைப்பிடி அளவே இதர மதத்தினர் வருகிறார்கள்! அந்த ஹிந்து நோயாளிகளிடம் நான் நன்றியுடன் உள்ளேன்!! இன்னும் என்னுடைய மருத்துவமனையில் எனக்கு உதவியாக பணிபுரியும் அனைவரும் ஹிந்துக்களே! அவர்கள் எனக்காக அர்ப்பணிப்புஉணர்வுடன் பணி புரிகிறார்கள்! அவர்களுக்கும் என் நன்றிகள்!! என் குடும்பமே வெளிநாட்டில் இருக்க நானும் அங்கே போகலாம் என்ற விஷயம் என்னுடைய ஒப்புதலில் மட்டுமே உள்ளது! இங்கு சகிப்புத்தன்மையின்மை உண்மையில் இருந்து நானும் அதனால் பாதிக்கப்பட்டிருந்தால் நான் ஏன் தொடர்ந்து இந்த நாட்டிலேயே இருக்க வேண்டும்?? நான் பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தால் நான் ஏன் இங்கே வசிக்கப் போகிறேன்! அது போல எதுவுமே இல்லை என்பதல்லவா உண்மை?

நான் என் குடும்பம் வசிக்கும் குவைத்துக்கு சென்றால் அங்கு நான் ஒரு பூஜ்யம்தான் !! ஆம் அந்த நாட்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கு எந்த மரியாதையும், உரிமைகளும் கிடையாது! நான் அங்கு சென்றால் இங்கு தொழில் செய்வதைவிட மிக அதிகமாக சம்பாதிக்கலாம்! ஆனால் அங்கு வசிக்கும் புலம் பெயர்ந்தோர் அடிக்கடி தங்கள் குடியுரிமை சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்!! இன்னும் அங்கு என் போன்றவர்களை வெகு இளக்காரமாகவே மதிப்பர்!! அங்கு அந்த நாட்டு குடிமக்கள், அரேபியர்கள் மற்றும் வெள்ளையர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் மரியாதை கிடைக்கும்! என் போன்றோரேல்லாம் அங்கு மூன்றன்தரக் குடிமக்களாகவே மதிக்கப்படுவர்!! நான் ஒரு முஸ்லிமாக ஒரு முஸ்லிம் நாட்டில் வசித்தாலும் நான் இந்தியன் என்ற கணக்கில்தான் வைக்கப்படுவேனே அன்றி அந்நாட்டு முஸ்லிமாக அல்ல!

இன்னும் நீங்கள் அமெரிக்காவுக்கு சென்று தங்கினால் அமெரிக்க இந்தியன், கனடாவில் தங்கினால் கனடிய இந்தியன், மற்றும் இதே போலப் பல ……….. !! ஆக அங்கு தங்கி என்னதான் சம்பாதித்தாலும் கூட 'இது என் நாடு' என்ற ஒட்டுதல் அந்த நாட்டின் மேல் என்றுமே உண்டாகாது!! அது என் தாய்நாட்டில் மட்டுமே நடக்கும் !! இந்தியாவில் என்னை யாருமே "நீங்கள் இந்தியரா?" என்று கேட்டதேயில்லை! அதுவே இதற்கு உள்ள வித்தியாசத்தை விளக்கும் !! நீங்கள் தாய்வீட்டில் இருக்கும் உணர்வு இந்தியாவில் மட்டுமே உங்களுக்கு கிடைக்குமே தவிர வேறெங்கும் இல்லை!!

சரி இப்போது எதற்காக இந்தப் பிரபலங்கள் கூப்பாடு போடுகிறார்கள்!! நான் எங்கள் ஊரில் எங்குமே தனியாகத்தான் சென்று வருகிறேன்! அப்படியிருக்க அமீர்கானின் மனைவி கிரண் ராவ் எதற்காக அஞ்சுகிறார்? அவர்கள் எல்லாம் மிக சிறந்த பாதுகாப்பான இடங்களில் சொகுசு வீடுகளில் வசிக்கின்றனர்! இன்னும் பல பாதுகாலவர்களுடன் தான் வெளியே செல்கின்றனர்!!! அவர்கள் குழந்தைகளை மிகப் பாதுகாப்பு உள்ள பெரிய பள்ளிகளில் தான் படிக்க வைக்கின்றனர்!! சாதாரணமாக தனியாக வெளியே செல்லும் நானும் என் கணவருமே இங்கு அச்சப்படாமல் இருக்கையில் இவர்களுக்கு என்ன பயம் வந்தது?? இன்னும் நாட்டிலுள்ள 13 கோடி இஸ்லாமியர்களின் பிரதிநிதி போல கருத்துக்களை கூற யார் இவர்களுக்கு அனுமதியளித்தது? இருக்கும்

இத்தனைக் கோடி முஸ்லம்கள் சார்பாக இருப்பது போல் இவர்கள் எப்படி கருத்துக்கள் கூறலாம்? இவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளை எப்படிப் பொதுவில் கருத்தை எடுத்துக் கூறலாம்? இன்னும் வெளிநாட்டில் என்னுடைய தாய்நாட்டின் இமேஜை குலைக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? இவர்களை எந்த அடிப்படையில் தங்கள் நாட்டில் வந்து வசிக்குமாறு பாகிஸ்தான் கூறலாம்?? இங்கு சகிப்புத்தன்மை இல்லாதது போல கருத்துக்கூற இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது! என்னுடன் பழகும் ஹிந்து நண்பர்கள் இந்த முஸ்லிம்களை பற்றி கூறும் கருத்துக்கள் எனக்கு கவலை தருகின்றன! என்னுடைய சக ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை உச்சத்தை தாண்டி விடக் கூடாதே என்று நான் அஞ்சுகிறேன்!! இந்த நாட்டில் நான் வாழ்ந்த மகிழ்வான வாழ்வு என் மதத்தின் மக்களாலேயே இல்லாமல் போய், நான் தலைகுனிந்து சொந்த நாட்டிலேயே அந்நியன் போல வாழ நேரமோ என்று அஞ்சுகிறேன்!! இந்த நாட்டில் கையளவு உள்ள நன்றி கெட்ட என் மதத்தின் மக்களாலேயே நான் இந்த நாட்டில் அந்நியப்படுத்தப் படலாம் என்று பயப்படுகிறேன்! இந்த நாட்டில் கிடைக்கும் சுதந்திரம், தாய் மண்ணின் வேர்கள், ஒருங்கிணைந்து வாழும் தன்மை போன்ற விஷயங்கள் உலகில் வேறெங்கும் கிடைக்காது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது! அதைப் புரிந்து கொண்டு இவர்கள் ஹிந்துக்களோடு இணக்கத்துடன் வாழ்ந்தால் மிகவும் நல்லது!! அது இவர்களுக்கு புரியவில்லை என்றால் என் சகோதர ஹிந்து மக்கள் இவர்களை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ள இறைவனைப் பிரார்த்திப்பது தவிர எனக்கு வேறு வழியே இல்லை!!

இப்படிக்கு
சோபியா ரங்வாலா

நன்றி ; நன்றி N Janani Harikrishnan

Leave a Reply