இந்திய தூதர் மீரா சங்கருக்கு விமானநிலையத்தில் நடந்த அவமரியாதை தொடர்பாக  அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மிசிசிபி மாகாணத்தில இருக்கும் மிசிசிபி பல்கலைக்கழகத்தின்  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  மீரா சங்கர் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின் பால்டிமோர் செல்வதற்க்கு  ஜாக்சன் எவர்ஸ் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் சேலைஅணிந்து சென்றிருந்தார்.விமானத்துக்காக அங்கு அவர் காத்திருந்தபோது,  விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சோதனை-நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.  தான் ஒரு  இந்திய தூதர் என அவர் கூறியதையும் விமான நிலையஅதிகாரிகள் பொருட்படுத்தாமல் சோதனையிட்டனர்

அமெரிக்க அரசிடம்  இந்தியதூதரகம் சார்பில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நடந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.


முன்பு  இரண்டு முன்று தடவை இதை போன்ற  சம்பவம் நடந்து இருக்கிறது . ஆனால் அமெரிக்கா யாருக்காகவும் அவர்களுடைய ரூல்ஸை மாற்றியது கிடையாது என்பது மட்டும் உண்மை  .

Leave a Reply