நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சிறியளவில் மேம்பட்டுள்ளது என்று சீன அரசு நாளிதழில் செய்தி வெளியிடபட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால் சிறியளவில் பலன் கிடைத்துள்ளது என்பது சர்வதேச சமூகத்துக்குத் தெரியும். இந்தியாவில் அரசியல் காரணங் களுக்காகவும், கட்சிகளின் கொள்கைகள் காரணமாகவும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சுணக்க மடைகின்றன. எனினும், இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை பல ஆண்டுகளாக தொடர்வது பாராட்டுக்குரிய விஷயம். இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஸ்திரத் தன்மைக்கும் எந்த சவால்களும் இது வரை ஏற்பட்டதில்லை. இந்திய பொருளாதாரம் மெதுவாக, அதேநேரத்தில் உறுதியான வளர்ச்சியை அடைந்துவருகிறது. பிற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா சிறப்பாகவே உள்ளது. எனினும், அதற்காக இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடமுடியாது. சீன பொருளாதாரம் மிகப் பெரியது; அது தொடர்ந்து வளர்ச்சி யடைந்து வருகிறது என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply