குஜராத் முதல்வருக்கு எதிராக, அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள தீர்மானத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்தியாவில், 80 சதவீத வன்முறைகள், முஜாகிதீன் களாலும், 20 சதவீத வன்முறை மவோயிஸ்டுகளாலும் நடக்கின்றன இது குறித்து அமெரிக்கா ஏதும் வாய் திறக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளன.

கோத்ரா ரயில்நிலைய சம்பவத்தைதொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை அடக்க, மாநில முதல்வர் நரேந்திர மோடி தவறி விட்டதாக குற்றம்சாட்டி 2005க்கு பிறகு, மோடிக்கு, அமெரிக்க விசா மறுத்து வருகிறது.

‘நரேந்திரமோடிக்கு, ‘விசா’ வழங்கக்கூடாது; அதே நேரத்தில் இந்திய அரசு, சிறுபான்மையினரின் உரிமைகளை தொடர்ந்து பாதுகாக்கவேண்டும்’ என, வலியுறுத்தி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஜனநாயககட்சி உறுப்பினர், கீத்எலிசன், குடியரசுகட்சி உறுப்பினர், ஜோபிட்ஸ் உள்ளிட்ட, எம்பி.,க்கள், கடந்த மாதம், தீர்மானம் கொண்டுவந்து நீலக்கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில் .:நரேந்திரமோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்ததீர்மானத்தை, அமெரிக்க இந்து அறக்கட்டளை’ எதிர்த்துள்ளது. இதுதொடர்பாக, இந்த அறக்கட்டளை இணைய தளம் மூலமாக, தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம்செய்து வருகிறது.

அமெரிக்க இந்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:குஜராத்கலவரத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது, கண்டனத்துக் குரியது. இந்தியாவில், 80 சதவீத வன்முறைகள், முஜாகிதீன் களாலும், 20 சதவீத வன்முறை மவோயிஸ்டுகளாலும் நடக்கின்றன. அக்ஷர்தாம், புத்தகயா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள், அமெரிக்க பார்லிமென்ட்டில் கொண்டுவந்த தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.எனவே, அமெரிக்கவாழ் இந்துக்கள், தங்கள் தொகுதி எம்பி.,க்கள், ‘இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது’ என, வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, இந்து அறக்கட்டளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.