விலைவாசி-உயர்வை பொறுத்தவரை பிரதமர் மன்மோகன் சிங் சர்வதேச-பணவீக்கத்தை குறை கூறுகின்றார் பொதுவாக பணவீக்கம் பெரும்பாலான-நாடுகளில் அதிகமாக இல்லை என்று செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார் .

மேலும் அவர் காங்கிரஸ்கட்சியின் தவறான பொருளாதார கொள்கைகள்

காரணமாகதான் இந்திய பணவீக்கம் அதிகமாக உள்ளது. ஊழலும் லஞ்சமும் அதற்கு தங்கள் பங்களிப்பை தந்துள்ளது ,

பணவீக்கத்தை குறைப்போம் என காங்கிரஸ் பல தடவை உறுதி தந்துள்ளது. ஆனால் மன்மோகன்சிங் இப்போது தன்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என கூறுகிறார். மந்திரக்கோல் இல்லை என்றல் ஏன் விலைவாசி கட்டுப்படுத்தபடும் என மக்களிடம் தெரிவிக்கின்றிர் என்றார்

Leave a Reply