இஸ்ரேல் உளவாளிஇஸ்ரேலிய புலனாய்வு துறையான மொசாட்டுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஈரான் நாட்டை சேர்ந்த அலி அக்பர் சியாடட்டை செவ்வாய் கிழமை அந்நாட்டு ஈரான் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவு துறையான மொசாத்க்கு உளவு பார்த்தததாகவும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்து இராணுவத்தளங்கள்,பயிற்சி விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்ததாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதற்காக இஸ்ரேலிடமிருந்து ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல்கள் தெரியவந்துள்ளது,

இந்நிலையில் தெஹ்ரானிலுள்ள எவின் சிறை சாலையில் இவருக்கு மரணதத்தண்டணை நிறைவேற்றபட்டதாக நீதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply