ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான அவசரசட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநிலம்முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, பிராணிகள் வதை தடுப்புசட்டத்தில், மாநில அளவில் திருத்தம்செய்யும் வகையில், தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டுவந்தது.


மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பிறகு இந்தசட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். கவர்னர் வித்தியா சாகர் ராவ் இன்று கையெழுத்திட்டார். இன்று மாலை அவசரசட்டம் பிரகடனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதன்மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை நீங்கியுள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக் கட்டு நடக்கும் .

அவசர சட்டமானது 6 மாதகாலத்திற்குள் உறுதியாக நடைமுறையில் இருக்கும். அதற்கு முன் சட்டமுன்வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். வரும் சட்டசபை தொடரில் இதற்குரிய சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டு உரிய சட்டம் கொண்டு வரப்படும்.

Leave a Reply